2014, அக்டோபர் 2, அண்ணல் காந்தி பிறந்த தினம். அன்று நானும் கார்த்தியும் வெள்ளோடு பறவை சராணலயத்தைல் இருக்கிறோம். பெங்களூரிலிருந்து முதல் நாள் மதியம், திட்டமிட்ட படியே புறப்பட்டோம். 6 மணி நேரப்பயணம். இது எங்கள் திட்டம். 8 மணிக்கு ஈரோடை அடைந்து விடலாம் என்று எண்ணியது நடக்கவில்லை. வழியில், நிறையத்தடைகள். வாகன நெரிசல் ஒரு புறம், உணவு இடைவேளை சற்று தாமதம், கார் டயர் பஞ்சர் ஒரு பெரிய இடஞ்சல், பற்றாததற்கு ஈரோடை அணுகும் போது, இரவு 9 மணி, வழித்தடுமாற்றம் வேறு. இப்படி, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலை மெரிலினை அடையும் போது, நடு ராத்திரி ஆகி விட்டது. காலை 4 மணிக்கு அறையை விட்டு கிளம்பியாக வேண்டும். எப்போழுதும், நண்பர் பரம சிவத்துடன் தான் தங்குவேன். இந்த முறை அவர், வெளியூர், சென்று விட்டு எங்களுக்காக, அவசர அவசரமாகத்திரும்பியதால், மெரிலினில் தங்கினோம். ஈரோட்டில் எனக்குத்தெரிந்து வசதியான இடம் கிடையாது. இது எவ்வளவு 'வசதி'யானது என்பதை அங்கே போய் தான் தெரிந்து கொண்டோம். சரி, 4 மணி நேரம் தானே என்று சற்றே கண் அசந்தோம். ஆக இந்த த்தூக்கம், மதிய உணவுக்கு அப்புறம் சும்மா கண் அசருவோமே, அது மாதிரி தான். நான்கு மணிக்கு டாண் என்று கிளம்பி விட்டோம். ஏன்னா, பறவை மட்டும் தானே நமக்கு ஓரே குறி!
நண்பர் பரமசிவமும் தயார் ஆகி விட்டார். சாய் குடிக்க சொல்வார், அவரை தொந்தரவு செய்ய விரும்ப வில்லை. வழியில், ஒரு டீக்கடை. எம்ஜியார் பாட்டு, உன்னை அறிந்தால்..... என சத்தமா ஒலிச்சுது. கேக்கனுமா. அந்த மர பெஞ்சில், உக்காந்து ஆனந்தமா டீயை பிஸ்கட்டுடன் சேத்து சாப்பிட்டது அருமை. நண்பர், பரமசிவத்திடமிருந்து ஃபோன் வந்து விட்டது. அவர் என்னடான்னா, ஏகப்பட்ட திண்டி ஐட்டங்களுடன், ஃப்ளாஸ்கில் காஃபியுடன் ரெடியாக இருந்தார். அந்த காஃபியின் அருமை அப்போது தெரியவில்லை. ஆனால், 2 மணி நேரம், நடந்தபின் அதுவே தேவாமிருதமானது மறக்க முடியாத அனுபவம்!
கார்த்தி, நானும் பரமசிவம் சாரும் (அவரை ஜி பி என்று நானும், அவர் என்னை வியெஸ் என்று அழைப்பதும், 30 ஆண்டுக்கு முன்பு, நான் ஈரோட்டில் இருந்த போது வழக்கம்). நண்பர் ஜி பி யும், நானும் தான், வெள்ளோடு பறவை சரணாலயம் தொடங்க 30 ஆண்டுகளுக்கு முன், முதல் முதலாக முயற்சி எடுத்துக்கொண்டோம் என நான் பலமுறை கூறியிருக்கிறேன், போர் அடிதிருக்கிறேன் என்றே சொல்லலாம்.இன்னிக்கு பல பேர், நான், நான் என சொல்லலாம். சொல்லப்போனா இதில், பறவைகள் மீதி ஜிபிக்கு ஆர்வம் ஏற்படுத்தி, முதல் முதலாக என் கைப்பட வன அதிகாரிக்கு வெள்ளோடு சரணாலயம் உருவாக்க வேண்டி கடிதம் எழுதியதைத்தவிர என்னுடைய பங்கு, வேறு ஒன்றும் இல்லை. நான் பணி புரிந்த வங்கியில் இடம் மாற்றம் கிடைத்து டெல்லி சென்று விட்டேன். ஆனால் நான், சுற்றுச்சூழலாளன் ஆனதற்கு, வெள்ளோடு வெள்ளோட்டம் தான் காரணம் எனபது மறுக்க முடியாத உண்மை
எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு, வெள்ளோடு போகிறோம். பள்ளி மாணவன், முதல் முதலா பள்ளிச்சுற்றுலா போவது போல ஒரு 'எக்சைட்மென்ட்'. இது தப்போ சரியோ தெரியல, ஆனா 70 வயசிலும், இது எனக்கு மகிழ்ச்சி தான்! போகும் வழியெல்லாம், நானும் ஜி பியும் இங்க தான், முதல்ல புஷ்சாட் பாத்தோம், Pied kingfisher பாத்தோம், அப்படி இப்படி போர் அடித்தோம். நீ என்ன நெனச்சாயோ தெரியாது. White breasted Kingfisher என ஜி பி சொல்ல, இல்ல ஜி பி அது இப்போ White throated Kingfisher என நான் சொல்ல, அதுக்கு அவர், 'அதெல்லாம் முடியாது, எனக்கு அது White breasted தான், 'இவனுங்க இஷ்டத்துக்கு பேர் மாத்துவானுங்க, நமக்கு அது White breasted தான்' அப்படிங்க, பழைய நினைவுகளில் மயங்க, 'இதோ, வெள்ளோடு வந்து விட்டது. வெள்ளோடு, ஜி பி வீட்டிலிருந்து 8 கி மீ தான் இருக்கும்.
அடேங்கப்பா, இது வெள்ளோடு தானா. என்ன ஒரு வாசல். வனத்துறை எங்களை அன்போடு வரவேற்றது. டிக்கெட் வாங்க கவுன்டரை அணுக, ஜிபிக்கு வன ஊழியர் என்ன ஒரு வரவேற்பு. மெல்ல நமது கேமராக்களை ரெடியாக்கிக்கொண்டு உள்ளே நகர்ந்தோம்.
கார்த்தி, உனது கடிதம் கண்ட பின், என் எண்ண அலைகளை மீண்டும் தொடர்கிறென்
செல்வா
பின்குறிப்பு
எனது யூடியூப் வீடியோவை இத்துடன் இனைத்துள்ளேன்


No comments:
Post a Comment