கார்த்திக்,
பண்டிபுர் பயணம் Bandipur tiger reserve பற்றி எழுதியிருந்தாய். அது எனக்கும் ஒரு புதிய அனுபவம் தான். வனத்துறை ஜீப்பில் காடுகளுக்குள் பயணம் எனக்கு சமீபத்தில் கார்பெட் காடுகளில் இதே போல் பயணித்ததை நினைவு படுத்தியது. எங்கே பார்த்தாலும் பச்சை பசேல் என்று இருந்தது. மழை காலம் இல்லையா? இது வரை எனது 40 வருட வன நடைப்பயணங்களில், இந்த அளவு விலங்குகளை ஒன்றாகக் கண்டதில்லை. சஃபாரி ஆரம்பித்த சில நொடிகளிலேயே, யானைக்கூட்டம், நல்ல காட்சி. அது மட்டுமா, அடேயப்பா, புள்ளி மான்களின் கூட்டத்திற்கு அளவே இல்லை. என் வாழ் நாளில், இத்தனை மான்களை ஒட்டு மொத்தமா, விலங்கியல் பூங்காக்களில் கூட கண்டதில்லை. பக்கத்தில் போய், அந்த குட்டி மானைத்தூக்க ஆசை, சின்ன சின்ன ஆசை தான்! காட்டிலே கால் வைக்க விட மாட்டேனுட்டாங்களே பாவிகள்! 90களில், நாங்க ஆளியார், Topslips காடுகளில், எத்தனை முறை நடந்திருக்கிறோம் ! வால்பாறை காடுகளில், ஒருமுறை சாம்பார் மான், ஒரு ஓடையில் வெகு அருகில் நின்று கொண்டிருந்தது. அருகில் போய் பார்த்தோம். காலில் அடி பட்டு இருந்தது. இல்லன்னா, அது இந்நேரம் ஒடியிருக்கும். ஆனா ஒரு சாம்பார் மானை இவ்வளவு அருகில் பார்ப்பதுக்கு நல்ல சந்தர்ப்பம். நடைப்பயணம் முடிஞ்சு வனத்துறைக்கு செய்தி கொடுத்தோம். அப்போதெல்லாம், Google Map GPS எல்லாம், என்ன என்றே தெரியாது. Trek route எல்லாமே குத்து மதிப்பு தான். நல்லவேளை, ஜீப் டிரைவர், பறவைகளைப்பற்றி அறிந்திருந்தார். சில அரிய பறவைகள் பெயர் கூட அவருக்குத் தெரிந்திருந்தது. பின்னால், வனஅலுவலர், ஒவ்வொரு ஓட்டுனரும், இயற்கையாளர் தான் என்று பெருமிதமாக சொன்னார். இது வரை நான் கண்டிராத Red headed Vulture ஐ பார்த்தது மிக மகிழ்ச்சி. அது மட்டுமல்ல. White rumped Vulture ஐயும் இங்கு தான் முதல் முதலாகப்பார்த்தேன். மற்றும் பல அரிய பறவைகள் பார்க்க முடிந்தது. மற்ற எல்லா வனக்காப்பகங்களையும் போல இங்கேயும், டிரைவர்கள், ஒருவரோடு ஒருவர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வனவிலங்கு நடமாட்டத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். என்னடா, ஒரு புலியையும் பார்க்க முடியிலையே, சஃபாரி முடியப்போகுதே... சொல்லி முடிக்கலை, நம்ம டிரைவருக்கு அந்த நல்ல சேதி கெடச்சுது. நல்ல வேளையா நம்ம் வண்டி ரொம்ப தூரத்தில், இல்லை. அலச்சல் வீண் போகல. ஒரு சிறுத்தை மிக அருகில் .. என்ன ஒரு கம்பீரம். நம்ம கேமரா செட்டிங்க் எல்லாம் பண்ண முடியல. சில நண்பர்கள், ஆர்வக்கோளாறில், ஜீப்பில் நம்ம மறச்சிட்டாங்க. ஓரளவுக்கு நல்ல கிளிக் கெடச்சுது. ஆனா, எல்லாமே ஓரிரு நிமிஷம் தான். பாய்ந்து பறந்து புதருக்கு பின்னால மறஞ்சிருச்சு. இந்த திருப்பதியில், பாலாஜி தரிசனத்துக்காக, நாள் பூரா, காத்திருக்கிற பக்த கோடிகளுக்கு, ஒரு நிமிஷம் கூட முழுசா பார்க்க முடியாது இல்லயா? ஹும் , அது மாதிரி தான்.. ஒரு விதத்தில பாத்தா, இந்த உயிரினங்களும், நமது கடவுள் தானே! அப்புறம் என்ன, மீண்டும், காட்டெருமை, கழுகுகள் மாதிரி, லட்டுகளும், நமக்கு வரப்பிரசாதமே.
நம்ம ரெண்டு ஜீப் சவாரியும், வேகமா முடிஞ்ச மாதிரி ஒரு உணர்வு. நம்ம தங்கி யிருந்த வனத்துறை விடுதியும், உணவும், மற்றும், அந்த உபசரிப்பும், அருமை. என்ன, சில மனக்குறைகள். நம்மை வழி நடத்திச்சென்ற நண்பர், ஒரு வியாபார நோக்குடனேயே செயல் பட்டார். Camera techniques சொல்லிக்கொடுப்பதாக வாங்கிய பணம் waste. ஆனால், நீ கூறியது போல், இது நமது முதல் பயணம். எனவே விட்டுத்தள்ளுவோம். என்ன, ஒரு சிறிய ஆதங்கம், புகைப்படப்பயிற்சி என்று அதுக்கு கொஞ்சம் பணவிரயம் ஆயிருச்சு.
ஒரு சந்தோஷம், Lesser whistling duck, Tickel's flycatcher, Pigmy Woodpecker, Racket tailed Dongo, Crested Serpent Eagle, Red headed Vulture, White Rumped Vulture இது எல்லாமே, மகிழ்ச்சி தான். வெறும் புலிகளை பாக்க மட்டும், நம்ம ரெண்டு பேருக்குமே மனசு கேக்கல. நம்ம EBird list இதோடு இணைத்துள்ளேன்.
இன்னொரு ஆதங்கம், கார்த்தி , வழக்கம் போல காரை நீங்களே ஓட்டும்படி செய்து விட்டேனே என்பது தான்.
செல்வா
பின் குறிப்பு
கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்யுங்கள். பார்த்து விட்டு , கருத்துகளை பதிவு செய்யவும்
No comments:
Post a Comment