ரங்கனன் திட்டு :
மூன்று மாதம் இடைவெளி .எந்த ஒரு பறவைகள் சரணாலயமும் என்னால் செல்ல முடிவில்லை .செல்வா சார் என்னை சாட்டலுக்கும் சுல்தான்பூருக்கும் அவர் செல்லும் போதெல்லாம் அழைத்திருந்தார் .என்னால் போக முடியவில்லை .
தீடிரென்ன போன வாரம் செல்வா சார் இடம் கேட்டேன் ரங்கனந்திட்டு போயிட்டுவரலாம்ன்னு .சார் உடனே வாங்கபோகலாம்ன்னுட்டார்.
நட்ராஜ் படகோட்டிக்கு அழைப்பு செய்து நாங்கள் வருவதை உறுதி செய்தோம் .
அதிகாலை 3.45 மணியளவில் புறப்பட்டோம் .
2 மணிநேரம் 30 மணி நிமிடம் பயணம்.இடையில் ஒரு டீ கடையில் நிறுத்தி டீ அருந்திவிட்டு தொடர்ந்தோம் .
ஸ்ரீ ரங்கப்பட்டினத்தை கடந்து மூன்றில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் பறவை சரணாலயம் வந்தடைந்தோம் .
போன முறை கூட்டம் இல்லை .இந்த முறை அதிகாலையே சிறிய கூட்டம் தொடங்கிவிட்டது .
சிறப்பு படகு முன் பதிவு செய்து இருந்தோம் .
அதிகாலை ரங்கனந்திட்டு எத்தனை அழகா இருக்கும் என அங்கு சென்று பார்க்க வேண்டும்