ஒவ்வொரு வாரமும் எங்களது தேடல் பறவைகளை நோக்கி அதிகமாகிக் கொண்டே இருந்தது.எதனால் பறவைகள் .பறவைகள் மட்டும்தானா? இல்லை வேற என்ன இலக்கு என்ற கேள்விகளுடனே நாங்களும் தொடங்கியிருப்போம் இந்த ஆறுமாத காலத்தில் எத்தனை இடங்களை நாங்கள் பார்த்தோம் ,எவ்வாறு சென்றோம் என எங்களது அனுபவங்களை பற்றி எழுதலாம் என திரு.செல்வா அவர்கள் கூறிய பொழுது எனக்கு முழு ஆர்வம் தொற்றிக் கொண்டது .
எங்களது நட்பு புட்டேனேஹள்ளியில் இருந்து தொடங்கியது .திரு .செல்வா அவர்கள் முதன் முதலில் பேசியது பறவைகளைப்பற்றி மட்டுமே .எனது போட்டோகிராபி ஆர்வத்தை கண்டு அவர் என்னை பிற எரிகளுக்கும் அழைத்து செல்வதாய் கூறியதும் நான் இன்றும் நினைவில் வைத்துள்ளேன் .ஒரு உள்ளுணர்வு உணர்த்தியதாய் செல்வா அவர்கள் பின்னாளில் என்னிடம் கூறியதையும் நான் இங்கு குறிப்பிடவேண்டும் . ஆனால் ஓராண்டு காலம் கழித்துதான் எங்களால் இணைந்து செயல்பட முடிந்தது .செல்வா அவர்கள் என்னை க்ரீன் சர்க்கிள் குழுவில் இணைக்கும் போதும் அதைத்தொடர்ந்து பெங்களூரின் பிற பறவைகள் ஆர்வலர்கள் குழுவில் சேர்த்தபோதும் என்னை ஒரு போட்டோக்ராபராக மட்டுமல்லாது ஒரு பறவைகள் ஆர்வலர் என்றே குறிப்பிட்டு உள்ளார் .நான் போட்டோக்ராபிக்ஹ்ர் கம் பறவைகள் ஆர்வலராய் மாறியது அப்படித்தான் . இன்று என்னை சுற்றி பலரும் பறவைகளை பற்றி பேச ,தெரிந்துகொள்ள ஊன்றுகோலாய் இருந்தது செல்வா அவர்களின் தொலைநோக்கு பார்வையும் அடுத்த சந்ததியினர்க்கு கொடுக்கவேண்டியதை சரிவர செய்யவேண்டும் என துடிக்கும் அவரது எண்ணங்களுமே .
திரு.செல்வா அவர்கள் தனது பறவைகள் உடனான பயணத்தை தனது இளைமை வயதிலே தொடங்கியதும்.,இத்தனை வருடகால அனுபவங்களும் ,ஒரு எழுதப்படாத புத்தகமாய் நான் பார்க்க ஆரம்பித்தேன்.எனது பயணம் அவருடன் தொடங்கியது கிருஷ்ண சாகரில் .அன்றிலிருந்து நான் பறவைகளை வேறொரு கோணத்தில் பார்க்கத்தொடங்கினேன். இந்த பரபரப்பான உலகில் நேரம் காலம் பார்க்காமல் உழைத்து சோர்ந்து போகும் நம் உடல் ,மனங்களின் அத்தனை வலியையும் நீக்கும் மருந்து நமது வேட்கை ,ஆர்வத்திடம் .ஆங்கிலத்தில் Passion என்பார்கள் . ஆனால் எந்த ஒரு வேட்கையும்,ஆர்வமும் மகிழ்ச்சியை தர வேண்டும்.ஒவ்வொருவரும் அவர்களது ஆர்வத்தையும் ,வேட்கையும் கண்டறிய வேண்டும் .ஆனால் அது மகிழ்ச்சி தருவதாய் இருக்கவேண்டும் .நாங்கள் இருவரும் வெவ்வேறு காலகட்டங்களில் எங்களது பயணத்தை தொடங்கியிருந்தாலும் இந்த ஆறு மாத கால பயணமானது எனக்கு வேறொரு பரிமாணத்தை கொடுத்தது .இந்த காலகட்டங்களில் நாங்கள் கண்ட பலவிதான பறவைகள் ,மனிதர்கள் ,அவர்களுடனான எங்களது அனுபவங்கள் பற்றி வரும் வாரங்களில் எழுத உள்ளோம் .எங்களுடன் சக பயணிகளாய் பறந்து திரிந்து பறவைகளையும் அது சார்ந்த இயற்கையையும் எங்களுடன் சேர்ந்து ரசிப்போமா .தொடங்குங்கள் உங்கள் பயணத்தை.
கார்த்திகேயன்
No comments:
Post a Comment