எப்போதும், இயற்கையெய்தும் வரை...
நீ எழுதும் ஒவ்வொரு கதையிலும் எனது குறிப்பு இருக்கும். இல்லை என்றால் என்னாசி இருக்கும். நீண்ட நெடும் பயணத்தை நீ தொடங்குகிறாய், புகைப்பட ஆர்வம், பறவை ஆர்வம், இயற்கை ஆர்வம் என நான் 50 வருடத்திற்கு முன் தொடங்கிய அதே இலக்குடன்... என்னை சுற்றுச்சூழல் - ஆர்வலனாக மாற்றிய லாப்லிங் பறவை, உன்னையும் அழைக்கிறது, 'Did he do it, will he do it. என்று ஏங்கி ! ஏனோ நான் மற்ற பறவை ஆர்வலர்களுடன் அதிகம் ஒட்டுவதில்லை. அவர்கள் வெறும் பொழுது போக்குக்காக பறவை பார்ப்பவர்கள். லாப்லிங் பறவையின் (Red Wattled Lapwing) அறைகூவல் அவர்களை பாதிக்கவில்லை. சலீம் அலி ஐயா இந்த பறவையின், மேலே சொன்ன ஒலியைப் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அது என்னை வெகுவாக பாதித்தது. முதன்முதலில் நான் பார்த்த வாக்டெய்ல் (Wagtail) வெறுதே வாலாட்டவில்லை.. தாலாட்டியது. நிறங்கள்.... என்னை மரங்களிடம் அழைத்து சென்றது. இதோ இன்று சுற்றுச்சூழலாளராக நான்.... சென்ற ஆண்டு நட்ட மரங்கள் பெங்களூரின் வரலாறு காணாத வரட்சியில் வாடுகின்றன. தண்ணீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். Rosy Starling, அல்ல அல்ல, ரோசி டார்லிங்க் மீண்டும் மீண்டும் வரவேண்டுமே!
சரி, இனி உனது ஒவ்வொரு பயணக் கட்டுரைக்குப் பின்னும் எனது வாழ்க்கை அனுபவங்கள் பின்னுரையாக மலரும். உன் எண்ணச் சிதறல்களுக்கு மணம் சேர்க்கும், பூவோடு, உன் பூவோடு சேர்ந்த நாராக...இனி நான், 'எண்ணப்பறவை சிறகடித்து' என்ற இணைப்புடன் உன்னுடன் பயணிப்பேன், முடியும் வரை...
சரி சரி மறந்துவிடுவேன் பேத்திக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் அந்த அவடவட்(Red Avadavat) பறவை படத்துடன். (சென்றவாரம் ரசித்தோமே அதே தான்)
செல்வா


No comments:
Post a Comment