எனக்கு இதுதான் முதல் அதிகாரப்பூர்வமான புட் பிடித்தல் அல்லது புள் வலையிடு (Birding ) செல்வா அவர்களுடன் . நான் இதே வழியில் பலமுறை சென்று உள்ளேன் .ஆனால் இந்த ஏரி எனக்கு கண்ணில் பட்ட மாதிரி ஞாபகம் இல்லை.காலை ஏழு மணி Green Circle Nature walk (இயற்கை உடனான ஒரு நடை )என்று அழைப்பு வந்திருந்தது .இது பெங்களூரின் வடக்கு பகுதியில் இருக்கிறது .இதன் அருகில்தான் இஸ்ரோவில் பணிபுரிவர்களின் குடியிருப்புகள் உள்ளன.எலஹங்காவில் இருந்து ஒரு பதினைந்து நிமிடங்கள் பைக்கில் அல்லது காரில் செல்ல ஆகும் நேரம் .ஒரு ரயில் கிராஸ்ஸிங்கும் உள்ளது . நான் வீட்டில் இருந்து கிளம்பு அங்கு செல்கையில் ஒரு பத்து நிமிடம் நடை ஆரம்பித்து இருந்தது .அங்கு சென்ற உடன் தெரிந்தது அது ஒரு பூங்காவாக உருமாறி கொண்டு இருந்ததது .இந்த முதல் nature walk எனக்கு பறவைகளை பற்றி எப்படி தெரிந்துகொள்ளுவது என்பது முதல் பாடமாக இருந்தது .அதற்கு மேலாக Green circle குழுமத்தில் உள்ள சிலரது அறிமுகம் எனக்கு கிடைத்தது . நான் முதலில் கண்டது Jacobin pied cuckoo .முதன் முதலில் இந்த பறவையை நான் பார்க்கிறேன் .நான் வேகமாக சென்று செல்வா அவர்களிடம் கூறினேன் .அவர்தான் அதன் பெயரை எனக்கு கூறினார் .இது தமிழில் சுடலைக்குயில் அல்லது கொண்டைக்குயில் என அழைக்கப்படுகிறது .நமக்கு எல்லாமே குருவி இல்ல கொக்கு .அதிகபட்சம் சத்தம் நல்லா இருந்தா குயில்.இதுதான் நம் பலபேருக்கு பறவையை பற்றிய புரிதல் .நான் மெதுவாக அந்த புரிதலில் இருந்து விடுபடுவதை உணர ஆரம்பித்தேன் .இதில் ஒரு ஆச்சிரியம் இந்த பறவையின் வருகையானது நமக்கு சில தகவல்களை தருவதாய் நான் தெரிந்து கொண்டேன் .
அதைப்பற்றி கூறுமுன் ,செல்வா சார்ஐ சுற்றி பலர் ஏதோ தகவல்களை பரிமாறிக் கொண்டு இருந்தார்கள் .செல்வா சார் மீன்கொத்தி பறவையை பற்றி விளக்கம் கொடுத்துவிட்டு நீர்காகம்,கொக்கு ,வாத்துகளின் வகைகள் பற்றி விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் .இருவர் மட்டும் அந்த குழுவில் இருந்து தனியே வந்து என்னிடம் கேமரா மற்றும் லென்ஸ் பற்றி விவரம் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். திரும்பவும் நாம் விட்ட இடத்திற்கு செல்வோம் .இந்த கொண்டைக்குயில் என்ன நம்முடன் இயற்கையுடனும் என்ன ஒரு இணைப்பை ஏற்படுத்துகிறது .இதன் வருகை பருவமழையின் வருகையை உணர்த்துமாம் .என்ன ஒரு விந்தை!
இந்த இயற்கை உடனான ஒரு நடையில் நான் மறக்க முடியாதது செல்வா சார் குறிப்பிட்ட மீன்கொத்தி பறவையின் ஒரு வகையான Common Kingfisher .இதை அவர் uncommon என்றே குறிப்பிட்டார் .அதன் பொருள் பின் நாட்களில் நாங்கள் இருவரும் அதனை பலமுறை தேடி கண்டுபிடித்து படம் எடுத்தபோது புரிந்தது. விரியும் எங்கள் இறைக்கைகள் .பறப்போம் இன்னும் ஒரு புதிய பறவையை தேடி .
உங்களுடன்
கார்த்திகேயன்
No comments:
Post a Comment