கண்கள் தேடும் மீன்களை-உன் கண்கள் தேடும் என் கண்கள்
சிங்கநாயக்கனஹள்ளி ஏரி அல்லது ராஜனுகுண்டே ஏரி : பெயர் உறுதி செய்யப்படவேண்டும் .
இது ஒரு பறவை ஆர்வலர் அல்லது இயற்கை ஆர்வலர் முனிஷ் என்னும் இளைஞன் மூலம் தெரிந்து கொண்ட இடம் .
நானும் , திரு செல்வாவும் இங்கே போன போது இரண்டு விதமான வழி இருந்தது .முதலில் ராஜனுகுண்டே flyoveril இருந்து கீழிறங்கி உடனே திரும்பும் திருப்பத்தில் சென்றால் ஒரு கிராமம் .அதன் வீடுகளின் இடையில் செல்லவேண்டியிருந்தது .எனக்கு இந்த மாதிரி செல்வதெல்லாம் புதுசு .கொஞ்சம் சங்கடமாக இருந்தது முதலில் .பிறகு சமாளித்து சென்றேன் .ஒரு வீட்டு பக்கத்தில் இருந்து வரப்பு மாதிரி ஆரம்பித்தது .காரை பார்க் செய்ய இடம் தேடினோம் .அங்கே நின்று கொண்டு இருந்த ஒருவரிடம் கேட்டோம் .அவர் வீட்டினருகில் நிறுத்த உதவி செய்தார்.நாங்கள் எங்களை அறிமுகம் செய்து கொண்டு புறப்பட்டோம் .அன்று பார்த்தது முதலில் gray wagtail .ஆனால் அன்று எனக்கு தெரியவில்லை . green bee eaters பற்றி தெரிந்து கொண்டது அன்றுதான் .வழியில் நடுவில் ஒரு பெரிய ஆலமரம் .செல்வா அவர்கள் அங்கேயே நின்று எத்தனை ஒரு வளமான ஒரு மரம் .இதில் குறைந்தது பத்தில் இருந்து இருபது வரை பறவைகள் இருக்க கூடும் என்றார் .அவர் எதிர்பார்த்தது ஆந்தையை .அதன் கண்கள் முக்கியமானது ஒரு போட்டோக்ராபரின் பார்வையில் .அன்று எங்களுக்கு வாய்ப்பு கிட்ட வில்லை.
ஆனால் அடுத்து காத்திருந்த அதிசயம்தான் Commmon Kingfisher (மீன்கொத்தி). அது பறந்து செல்வதே தெரிவதில்லை. அத்துனை சிறிய பறவை. அது அமர்ந்து மீனை தேடும் விதம். கழுத்து முன்னும் பின்னும் சென்று கண்கள் தேடும் அழகு. ஒரு தாவலில் மீனை பிடித்து எதிரான மரத்தில் அமர்ந்து மீனை முன்னும் பின்னும் அடித்து உண்ணும் விதம். Kingfisher with kill என்பார்கள். செல்வா மீன் மற்றும் மீன்கொத்தி இரண்டின் கண்களும் ஃபோட்டோ வல்
வரவேண்டும் என்பார். என்னுடைய இன்ஸ்டாகிராமில் ஜப்பானிய நண்பர்கள் உள்ளனர். அவர்கள் எப்பொழுதும் common kingfisher ன் ஃபோட்டாக்களே பதி விடுவார்கள். அதேபோல் அற்புதமான பதிவிட வேண்டும்.
இன்னும் விரியும் கண்கள் இரையை தேடி.
உங்களுடன்
கார்த்திகேயன்
எண்ணப்பறவை சிறகடித்து..!
தம்பி கார்த்தி,

No comments:
Post a Comment