கார்த்தி,
உன்னுடன் முதல் முறையாக பண்டிப்பூரில் சிறுத்தையுடன் சென்ற மாதம் கிடைத்த அனுபவத்தின் விளைவு தான் இந்த கபினி பயணம். இது மிகவும் அற்புதம். சொல்லப்போனால், இது என் வாழ்க்கையின் ஒரு முக்கிய மைல் கல் என்றே கூறுவேன். ஆஹா, இந்த பெண்புலி பல்லா நமக்குத்தெரியாத சில காட்சிகளைக் காட்டி விட்டது. கிட்டத்தட்ட அரைமணி நேரம், நம் கேமராக்க்கள் , போதும் போதும் என்னும் வரை படம் பிடித்துத்தள்ளி விட்டன.
இந்த முறை நாம் இருவரும் தனியாகவே போவது என்று முடிவு செய்தது தான் தாமதம், நான், தலை கால் தெரியாத ஆர்வத்துடன், ஜங்கிள் லாட்ஜ் அண்ட் ரிசார்ட், கர்னாடகா அரசு ஆன்லைன் சைட்டில் ரூம் பதிவு செய்து விட்டேன். தவறை நீ சுட்டிக்காட்டிய போது தான், நான் புக் செய்தது டார்மிட்டரி என்று தெரிந்தது. ஆடிப்போய் விட்டேன், என் அவசரக்குடுக்கைத்தனத்தை நினைத்து. என்ன, மீண்டும், கால் சென்டரை அணுகி, தனி அறைக்கு மாற்ற வேண்டிய சிரமத்தை ஒரு அனுபவமாகவே நினைக்கிறேன். அப்படி மாற்றியதால் தான், அந்த நல்ல அறை நமக்குக் கிடைத்தது.
பாக்கேஜில் ஒரு படகு சவாரி, ஒரு ஜீப் சஃபாரி அடக்கம். என்னடா ஒரு சஃபாரியில் நமக்கு புலி காணும் அதிர்ஷ்டம் இருக்குமா என சந்தேகம். நம்ம ரெண்டு பேரில் யாருக்கோ அதிர்ஷ்ட மச்சம் இருக்குதுன்னு நெனைக்கிறேன். கண்டிப்பா, எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் கம்மி தான்!
படகுப்பயணம் எப்படி இருக்குமோ என்ற அச்சம், பொய்த்து விட்டது. நமக்கு நிறைய அதிர்ஷ்டம் இருக்கணும். இல்லைன்னா, 40 வருஷ அனுபவம் மிக்க அந்த படகு ஓட்டிக்கு பறவைகளைப்பற்றிய என்ன ஒரு ஆழமான அனுபவம்! நாம் பயணித்த காலம் பறவைகள் கொஞ்சம் குறைவு தான். இருந்தாலும், சில RARE பறவைகளைக்காண முடிந்தது நம் பாக்கியமே. அதிலும், அந்த OSPREY பறவை, அடேங்கப்பா, என்ன அற்புதம்!. வலசை வரும் பறவை தான். ஆனால் இது மட்டும் அங்கேயே தங்கி விட்டதாம். இந்த படகு சவாரி, நாம் தங்கியிருந்த இடத்திலேயே ஆரம்பித்தது நமக்கு வசதி. ஏன்னா, கபினி ஆற்றங்கரையிலேயே நாம் தங்கினோம். இந்த படகு சவாரியில், பொதுவாக சுற்றுலாப்பயணிகள் தான் இருந்தார்கள். ஆனா, நம்ம அதிர்ஷ்டம், அந்த படகோட்டி, நம்மை முன்னால் நிற்க அனுமதித்தது. ஆற்றில், நீர் வரத்து குறையாததினால், யானைகள் தண்ணீர் குடிக்க வரவில்லை. அது ஒரு ஏமாற்றம் தான். மார்ச் மாசம், மீண்டும் போகனும். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம், சவாரி. இருட்டி விட்டது. அரசு விடுதியில் வனத்துறை, இரவு உணவு நன்றாகவே இருந்தது. அதுக்கப்புறம், ஒலியும் ஒளியும் காட்சிக்கு நாம் ரெண்டு பேர் தான் போனோம். நம்மைத்தவிர, இரண்டு வெளி நாட்டுக்காரங்க மட்டும் தான் இருந்தாங்க. படம் நன்றாகவே இருந்தது. சரி, நம்ம ரெண்டாம் நாள் புலியுடன் நம் அனுபவத்தை நீ எழுது. நானே போர் அடிக்கிறேன்.இதோ, என்னுடைய யூடுயூப் வீடியோவையும் இனைத்திடுக்கிறேன். யார் பாக்கிறாங்களோ இல்லையோ, நீ கண்டிப்பா பார்த்து விடுவாய்.
என்றும் இயற்கையுடன்
செல்வா
Interesting Kabini tiger behaviour video can be seen by clicking the link below
https://youtu.be/uTBAGh6EGK8?si=QtrbYNIHwgeVEFxv


No comments:
Post a Comment