ப்ளூ faced மல்கோஹா : பறவைகள் பலவிதம்:ஒவ்வொன்றும்
செல்வா சார் அப்படி நினைத்திருக்க வாய்ப்பு இல்லை.
இன்றைய அனுபவம் ,எனக்கு ஒருபறவையை பற்றிமட்டும் எழுதினா ல் என்ன என நினைக்க வைத்துவிட்டது.
ப்ளூ faced மல்கோஹா : எனக்கும் முதல் முறை இந்த பெயரை கேட்ட பொழுது வியப்பை ஏற்படுத்தியது .இதை நான் முதல் முறை பார்த்தது ஜெயமங்கலி ப்ளாக் பக் காட்டில் .
மூன்று இருந்தது .நானும் செல்வா அவர்களும் எப்படியாவது போட்டோ எடுத்துவிடலாம் என முயன்றோம் .முடியவில்லை .செல்வா சார் ..என்ன பறவை இது
எனக்கு
மல்கோஹா மாதிரி தெரியுதுன்னாரு .ஏதோ குயில் மாதிரிதான் எனக்கு தெரிந்தது .மீண்டும் அதனை கவனித்தபோது அதன் கண்கள் இறக்கைகள் வேறமாதிரியும் ,இருந் ததை கவனிக்க முடிந்தது .
செல்வா அவர்கள் கண்கள் உதா நிறம் ஆக தெரிகிறது ,இது
ப்ளூ faced மல்கோவா என்றார்.எனக்கு ஒரு வித வியப்பை ஏற்படுத்திய தருணம் ..இப்படியெல்லாம் பறவை இருக்குமா ?
மீண்டும் அதனை கண்டது மரசந்திரா ஏரி .இந்தமுறையும் குயில் என நினைத்து நகர்ந்தேன் .செல்வா அவர்கள் இது
ப்ளூ faced மல்கோஹா ..இன்னைக்கு நல்ல வாய்ப்பு .
எப்படியாவது போட்டோ எடுக்கலாம் என பலவிதமாக முயன்றும் அது தன்னை மறைத்துக்கொண்டோ அல்லது அங்கும் இங்கும் பறந்தோ எங்களை போட்டோ எடுக்க விடவில்லை .எடுத்த படங்களும் இறக்கை மட்டுமோ இல்லை கண்கள் ,அல்லது மூக்கு மட்டுமே தெரிந்தது .அதன் பின் எங்கோ சென்று ஒளிந்துகொண்டது .அரைமணிநேரம் கா த்திருந்து அங்கிருந்து கிளம்பினான் .
ப்ளூ faced மல்கோஹா :நீல முக செம்பகம் ,நீல முக பூங்குயில் ,மற்றும் ஒருவகையான காகம் என்றும் அழைக்கப்படுகிறது .
மல்கோஹா -பூ காக்கா -இது சிங்கள மொழியில் இருந்து பெறப்பட்ட பெயர் .இந்த பறவையானது குயிலின் பண்புகளை ஒத்திருப்பதை என்னால் காணமுடிந்தது .அது தன்னை ஒளித்துகொண்டேயே வாழ முற்படுவதாய் தெரிகிறது .சின்ன நகர்வும் அதை அச்சுறுத்துவதாக உணர்கிறது .அதன் கண்கள் உதா வண்ணத்தில் பளிங்கு போல் இருந்தது .அது என்னதான் ஒளிந்துகொள்ள முற்பட்டாலும் அதன் பளீர் உதா கண்களும் நீண்ட சாம்பல் வெள்ளை இறக்கைகளும் அதனை காண்பித்து கொடுத்துவிடும் .
ஆனால் போட்டோ எடுப்பது கடினம் .
நான் முடிவு செய்து இருந்தேன் அடுத்த வருடம் காலெண்டரில் இந்த அழகு பறவை இடம்பெறவேண்டும் என .
ஹெசரகாட்ட ஏரியில் மீண்டும் கண்டதும் விரட்டி சென்றோம் .அதேபோல் ஒளிந்து விளையாடி பொறுமையை சோதித்தது .
அடுத்த காணல் தமிழ்நாட்டின் மிக முக்கியமான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கலில் .10 செகண்ட் தோன்றிமறைந்தது .போட்டோ எடுத்துவிட்டேன் .நண்பனிடமும் காண்பித்துவிட்டேன் .போட்டோ நல்லா வந்தது .எல்லோரும் கேட்டார்கள் என்ன பறவை என்று.அதன் கண்கள்தான் எல்லோருக்கும் புடித்துஇருந்தது .ஆனால் அந்த படம் காலண்டரில் இடம் பெரும் அளவுக்கு இல்லை .
இதோ இன்று ஹெசரகாட்ட ஏரியில் ஒரு நீண்ட நடைக்கு பின் அரைமனதுடன் வேறொரு வழியில் நடக்க தொடங்கிய போது கண்கள் முன்னாடி வந்து நின்றது .நாங்கள் எல்லோரும் எடுக்க முயற்சி செய்து ..முடியவில்லை .எல்லோரும் நடந்து சென்றுவிட்டார்கள் .
நான் மெதுவாக நடக்க முற்ப்பட்டேன் .என்னை சுற்றிவந்து என்னருகில் உள்ள மரத்தை பற்றி உட்கார்ந்தது .நான் நகராமல் மெதுவாக தொடங்கினேன் என்னும் இருக்கும் காலண்டர் கனவை நினைவாக்க .35 படங்கள் ..எனக்கு பிடித்த backgroundil .
அது என்னுடன் பழகிவிட்டதை உணர்ந்தேன் .
இனி எனக்கு அடுத்த வாய்ப்பு நீ கொடுக்கும் வரை இன்று எடுத்த படங்கள்தான் எனக்கு பெஸ்ட் !
நன்றி
ப்ளூ faced மல்கோஹா
தம்பி கார்த்தி,
இந்த பறவை BLUE FACED MALKOHAவை இதற்கு முன் நான் வேறு இடங்களில் கண்டதில்லை. முதல் முறை அவலஹள்ளி ஏரிக்குப்பின்னால், ஒரு முறை பார்த்த போது ஒரே சுறுசுறுப்பாக ஆகி விட்டேன். ஏறத்தாழ ஒரு ஆறு மாசமிருக்கும்னு நினைக்கிறேன். இது வரை நான் பாக்கவில்லையே, சரி இது என்ன தான் வகை என்று Grimmett புஸ்தகத்தை அலசினேன். இது குயில் வகை தான்னு உள் மனசு சொல்லிச்சு. அது சரியாகி விட்டது . இது குயில் வகை தான். அப்புரம், இதை ஜெயமங்கலி blackbuck சரணாலயத்தில் பார்த்தோம். அப்புறம் வரிசையாக பல இடங்களில் பாக்கிறோம். இது இங்கே தென்னிந்தியாவில் மட்டும் தான் இருக்கிறது. GREEN FACED MALKOHA ஒரிசா, மேற்கு வங்காளம், ம்ற்றும் வடகிழக்கில் இருக்கிறது. SIRKEER MALKOHA மரக்கலரில் இந்தியா புராவும் இருக்குதாம். ஆனால் இமயமலயில் இல்லை. இமயம் என்று சொன்னதும் எனக்கு சாத் தால் மறக்க முடியல்லை. விரைவில், நாம் இருவரும் அங்கே போகனும். நான் டெல்லியில் இருந்த போது பல முறை போயிருக்கிறேன். பறவை ஆர்வலர்களின் மெக்கா அது. விரைவில் போவோம். இது வரை நீ பார்க்காத பல வண்ணப்பறவைகளை அங்கே காணலாம். ஒரு முறை போனால், மீண்டும் மீண்டும் போகத்தோணும்.
இந்த முறை நான் கொஞ்சம் முன்னால் நட்ந்து விட்டேன். நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டேன். ஆனால் அதை அற்ப்தமாகப்படமாக்கி விட்டாய். வாழ்த்துகள். ஆனால், ஹெசர்கட்டா ஏரியில், இந்த முறை மூங்கில் காட்டுப்பகுதியில் ஆயிரக்கணக்கில் செத்த மீன்களை பார்த்த பின் எனக்கு மனசு சரியில்லை.
அடுத்த நாளே அதை ட்விட்டரில் படத்தோடு பதிவு செய்தேன். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை tag செய்து எழுதியதால், நடவடிக்கைகள் தூரிதலமாகின. ஒன்று மட்டும் மனதுக்கு திருப்தி. ஒரே இனத்தைச்சேர்ந்த அந்த மீன்கள் ஏரியிலிருந்து வரவில்லை. அருகில் உள்ள மீன் வளர்ப்பு அலுவகத்திலிருந்து வந்தவை என கண்டு பிடிக்கப்பட்டது. என்ன இருந்தாலும், அந்த மீன்கள் நம் கண் முன்னால் துடிதுடித்து செத்து மடிந்தது வேதனையே
செல்வா

No comments:
Post a Comment