Tuesday, July 9, 2024

சத்தால் : சாட்-டல் - ஏழு ஏரிகள் - பாகம் -1

செல்வா அவர்களும் நானும் பெங்களூரின் பல ஏரிகளுக்கு சென்று இருக்கிறோம் .எப்பொழுது சென்றாலும் செல்வா அவர்கள் சொல்வது நைனிடால் ,சத்தால் பறவைகளும் அதன் வண்ணங்கள் பற்றியும் .நீங்க கண்டிப்பா ஒருதரம் பாக்கணும்னு சொல்லி சொல்லி எனக்கு அது ஒரு ட்ரீம் உலகமா உருவானதுன்னு சொன்னால்  அது மிகையாகாது .ஒரு முறை செல்வா அவர்கள் டெல்லி போகிருந்தப்ப என்ன சத்தால் செல்ல அழைத்திருந்தார் .எனக்கு அப்ப விடுமுறை கிடைக்காததால என்னால போக முடியல .அவரும் அதுனால  அங்க போகல .இந்த முறை இருவருக்கும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த பிளான் பண்ணினோம் .


சத்தால் : ஏழு ஏரிகளும் ,இமயமலையின் தாழ்வாரத்தில் அமைந்த மலையும் பல வண்ணபறவைகளின் உலகமாக உள்ளது .எங்களது பயணம் டெல்லியில் இருந்து 6 மணிநேரம் .டெல்லியில் இருந்து ஹல்த்வாணிக்கு (Haldwani )-காத்கோடம் (kathgodam )சென்ற பயணம் பற்றி எழுத இன்னொரு பாகம் தேவைப்படும் .இந்தியாவின் மிகப்பெரிய காடுகளின் ஒன்றான ஜிம் கார்பெட்டின்  (Jim corbett ) ஒட்டிய பகுதிகளில்  சென்றது குறிப்பிடத்தக்கது .

ஹேமந்த் : எங்களது birding guide .அவர் எங்களை அழைத்து செல்ல   குல்திப் என்பவரை  அனுப்பி வைத்திருந்தார் .காத்கோடத்தில் இருந்து சுமார் 33 கிமீ பயணம் .நாங்கள் சிறிது தாமதமாக சென்றதால் ரயில் நிலையத்தில் மிக அதிக கூட்டம் . சிறிது நேரத்தில் குல்திப் எங்களை அங்கிருந்து சத்தால் அழைத்து சென்றார் .அங்கிருந்து செல்லும் வழியில் உணவு அருந்தி விட்டு கிளம்பினோம் .

செல்லும் வழியெல்லாம் மலைகளும் ,மரங்களும் ஒருவித அற்புதமான உணர்வை தந்தது.

நான் கனவில் நினைத்ததைவிட அற்புதமாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

போகும் வழியில் செல்வா அவர்கள் அவரது  அத்தனை சத்தால்  பற்றிய  அனுபவங்களையும் சொல்லிக்கொண்டே வந்தது எனக்கு ஒரு நல்ல ஒரு அனுபவம்  .எனக்கு என்னோவோ வட இந்தியா முதல் முறை வருவது போன்ற உணர்வே இல்லை .எனக்கு செல்வா அவர்கள் கூட இருந்ததனால் அந்த மாதிரி தோன்றியதோ என்னோவோ .

நாங்கள் முதலில் சென்றது சத்தால் ஸ்டுடியோ .இது ஒரு அடர்ந்த காடு .ஸ்டூடியோ என்ற பெயர்   nature /bird போட்டோகிராபர்கள் இந்த இடத்திற்கு வந்து போட்டோ எடுக்க   வருவதால் அந்த பெயர் .

முதல் பகுதி : அங்கேயே பறவைகள் வரும் எனக்கூறி காத்திருக்க சொன்னார் ஹேமந்த் .எனக்கு ஹிந்தி பேசவராது .ஆனால் புரியும் .சுத்தமாக புரியாத இடங்களில் எனது பார்வை செல்வா அவர்களை நோக்கி போகும் .அவரும் சிரிக்காமல் எனக்கு விளக்குவார்.

மழை தொடங்கியது .இன்னும் ஒரு பறவை கூட பார்க்கலை .

ஒரு  கூடாரத்தின் அடியில் காத்திருந்தோம் .ஒரு  அரைமணிநேரம் கழித்து மழை நின்றது .ஏற்கனவே நேரம் ஆகிருந்ததால் ,நாங்கள் அங்கிருந்து கிளம்ப வேண்டியிருந்தது .

அந்த மலைப்பகுதியை பார்த்தாகிற்று .ஆனால் எந்தவொரு பறவையும் பார்க்கவில்லை .கிளம்ப வேண்டியிருந்தது .

வெளியில் வந்து ஒரு டீ குடிக்கலாம் என இருந்தபோது ..சார் ,எல்லோ த்ரோட்டேட் மார்டென்  (Yellow throated marten ) என ஹேமந்த் அழைத்தார் ...

நான் கேமராவை செட் பண்ணி என்ன பறவை இது என்று உற்று நோக்கையில்  ..அது பறவை இல்லை ,ஒரு விலங்கினம் .

என்ன ஒரு அழகு .

அன்றைக்கு அத்தனை தூரம் பயணம் செய்து காத்திருந்ததற்கு இயற்கை  அளித்த பரிசு Yellow throated marten  .(இதனை கரும்வெருகு என தமிழில் குறிப்பிட்டுள்ளார்கள்) 

தொடரும்



தம்பி கார்த்திக், 

சாத்தால், ஆம்,  சாத் என்றால் ஏழு, தால் என்றால் ஏரி என்று இந்தியில் பொருள்படும்.  உண்மையில் சொல்லவேண்டும் என்றால்,  உன்னை நான் கட்டாயப்படுத்தி இந்த இடத்துக்கு அழைக்கிறோமோ என்ற ஒரு மனச்சுமை எனக்கு இருந்து கொண்டே இருந்தது. உனது பாகம் 1 பார்த்த பின் தான், நீ, அந்த பறவைகளின் சொர்க்கபூமியை எவ்வளவு விரும்பியிருக்கிறாய் என்று அறிந்து கொண்டேன். ஒரு 7 அல்லது 8 முறை தில்லியில் இருந்த போது ஆண்டு தவறாமல் போவதுண்டு. ஆனால், இந்த முறை தான், 84 பறவைகளை பதிவு செய்துள்ளேன். பறவை வழிகாட்டி, ஹேமந்த், இப்பொழுது வரவேண்டாம் என்று எச்சரித்தும், நான் இங்கே போவதில் உறுதியாக இருந்தேன். என் சாத்தால் ஆர்வம் இன்று நேற்று வந்ததல்ல. நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. ஆனால் சரியான ஒரு துணை இது வரை அமையவில்லை என்பது தான் உண்மை. நீ வந்த பிறகு தான் அது நிறைவேறியது. எத்தனை காலம் இந்த ஆர்வத்தை தாங்கிப்பிடிக்க முடியும் என்று தெரிய வில்லை. 

சத்தாலில்,    நாம் நேரே ஸ்டுடியோ பகுதிக்கு போக நமக்கு பல தடைகள்.  நம்ம ரயில் பயணம் தாமதமானது எனது பொறுமையை சோதித்தது உண்மை. சத்தாலை அடைந்த போது, சுமார் 3.30 மணி இருக்கும். அதிலும் ஸ்டுடியோ ஸ்பாட்டை அடையும் போது, சரியான மழை. ஆக, ஆரம்பமே சரியில்லை. சரியான disappointment. எனக்கு பழகிப்போன இடம் என்றாலும், நான் உன்னைப்பற்றி கவலையாக இருந்தேன். இவ்வளவு தூரம், கூட்டி வந்தபின், சே, சே, நாளையாவது நல்லா இருக்குமா அப்பிடின்னு கவலை. 

அப்பறம் தங்கற இடம், எப்படி இருக்குமோ என்று கவலை. சாப்பாடு புடிக்குமோன்னு ஒரு தயக்கம். வழியில், உனக்கு சிறு உடல் பிரச்சனை சேர்ந்து கவலையை அதிகமாக்கி விட்டது. கிரீன் சர்க்கிள் மீட்டிங் வேற ஏற்பாடு செய்திடுந்தேன். செம தயக்கம். ஆனா, உன்னை நான் உண்மையிலேயே பாராட்டனும். ஏன்னா எதையுமே காட்டிக்காம, நீ மீட்டிங்க்கில் கலந்து கொண்டது மட்டுமல்ல, ஆர்வத்துடன், கூட்டத்தில், பங்கெடுத்தது, பாராட்டுக்குரியது. 

அன்னைக்கு ராத்திரி, நெரைய பேசினோம், கடந்த காலத்தை ஒரு அலசு அலசி விட்டோம். உன்னை நானும் , என்னை நீயும், ஒரு அலசு அலசி விட்டோம்னு தான் சொல்லனும். அதுவும், சரியான தூக்கம் இல்லை. அடுத்த நாள் விடிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து விட்டோம். நாங்க 4 நாளுக்கு கார் புக் செய்து இருந்ததால், பயணம் ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை. 

அன்னக்கு என்ன செய்தோம், நல்ல விடியலா, அடுத்த பாகத்தில் பார்ப்போம்

No comments:

Post a Comment

கூண்டுக்கிளி

கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது நான்  கொஞ்சம் புண்ணியம் செய்தவன் தான்!  ஆனால் அதோ அங்கே  நண்பா நீ, அந்தோ......