எனக்கு அவ்வளவா ரயில் சாப்பாடு ஒத்துக்கல ரூமுக்குநேரபோய் தூங்கணும்னு நெனைச்சேன் .ஆனா செல்வா அவர்கள் சத்தால் green circle மீண்டும் புதுப்பிக்கலாம்ன்னு ஒரு சந்திப்பு ஏற்பாடு பண்ணியிருந்தார் .நான் போவது கொஞ்சம் சந்தேகம் இருந்தது .முதல் நாள் ஒரு பறவையும் கிடைக்காதது கொஞ்சம் யோசனையாக இருந்தது .ஆனால் செல்வா அவர்களுக்காக கிளம்பலாம்ன்னு முடிவு பண்ணி கிளம்பிட்டேன் .நாங்கள் Aftar அவர்களை சந்திக்க சென்றோம் .அவரது வீட்டில் எல்லா குழு உறுப்பினர்களுக்கும் சந்திக்க அழைத்திருந்தார் .
செல்வா சார் அவரது வருகையின் முக்கியத்துவத்தையும் ,Green cricle சுதந்திரமாக செயல்படவேண்டிய அவசியத்தையும் நன்றாக விளக்கினார் .சிலரது கேள்விகள் அனாவசியமாக தெரிந்தாலும் அவர் கையாண்டவிதம் ஒரு பக்குவப்பட்ட முதிர்ந்த அனுபவம் என தெளிவுபடுத்தியது .
Aftar அவர்களின் உபசரிப்பு ,மற்றும் அவரது ஆர்வம் பாராட்டுக்குரியது .
அவர்களுக்கு Green circlin டி ஷர்ட் அனுவிக்கப்பட்டு பதவிப்பிரமாணம் செய்தும் வைத்தார் செல்வா .
மறுநாள் சத்தால் ஏரி சுத்தம் செய்யும் (Plogging )பணியும் முடிவு செய்யப்பட்டது .
இதைப்பற்றி தனியாக ஒரு பாகம் எழுதவேண்டும் .
இரண்டாம் நாள் - சத்தால் -பயணம் - முதல் நாள் எந்த பறவையும் பார்க்காததால் நேராக பிரட் பறவைகள் hiding பகுதிக்கு சென்றோம்.
காலை ஐந்து முப்பதுக்கு கிளம்பேவேண்டும் .நாங்கள் கிளம்பி ஆயத்தமானோம் .ஹேமந்த்தின் டிரைவர் சரியாக ஐந்து முப்பதுக்கு எங்களை அழைத்து சென்றார்.
எனக்கு முதல் முறை பறவைகள் hiding அனுபவம் .நாங்கள் ஒரு பதினைந்து நிமிடம் காத்திருக்க ,முதலில் ரெட் -பில்ட் -லியோத்ரிக்ஸ் தோன்றியது .அங்கிருந்த நீரில் மூழ்கி எந்திரித்தது .எனது கேமரா ஆட்டோபோக்ஸ்சில் வேலை செய்யவில்லை .Manual மோடில் வைத்து கிளிக் செய்தேன் .
முதன் முறை இந்த பறவையை பார்க்கிறேன் .இது ஓரு வண்ணமிகு பறவை .இது நம் நோட் புக்கில் எல்லாம் பார்த்த ஞாபகம் வந்ததது .
செல்வா அவர்கள் ஏன் எங்களது ப்லோகிற்கு வண்ணச்சிறகுகள் என்று பெயர் வைத்தார் என புரிய ஆரம்பித்தது .ஆனால் சிறகுகள் மட்டுமா வண்ணம் .வண்ணமூக்குகள் ,வண்ண வாலுகள் ,வண்ண ...வண்ண ..என ..சொல்லிக்கொண்டே இருக்கலாம் .
இது மலைகளின் ராபின் என அழைக்கப்படுகிறது . இது கொஞ்சம் shyana பறவை .இது எல்லாவிதமான பகுதிகளிலும் வாழக்கூடியது .
அந்த சத்தால் மலையின் /மழையின் பின்புலத்தில் பார்க்கும்போது இன்னும் எத்தனை அழகாக இந்த பறவை .
No comments:
Post a Comment