Friday, July 26, 2024

long tailed Broadbill : ஹெல்மெட் bird : சத்தால் பகுதி -3


இரண்டாம் நாள் அதிகாலை ஒரே ஒரு பறவையை பார்ப்பது மட்டும் முதல் பகுதியின் இலக்காக இருந்தது  .அது Long tailed Broad பில் .எப்பொழுதும் நான் பயணம் செய்கையில் ,ஏதாவது பாதையில் அங்கேயே நிறுத்திவிட்டு அப்படியே அந்த பாதை வழியே செல்ல வேண்டும் எனத் தோன்றும் .சத்தால் bawolil இருந்து broadbill தேடி சென்றபோது அதுபோலவே ஹேமந்த் எங்களது birding guide ஒரு  அனுபவத்தை தந்தார் . மலைப்பாதையில்   வழியில் நிறுத்தியவுடன் காரிலிருந்தே நான் பார்த்துவிட்டேன் broadbillai.காரில் இருந்து இறங்கி ஒரு சரியான பகுதியை தேர்ந்து எடுத்து கேமெராவை பொசிஷன்ஸ் செய்து தயரானோம் .அது வெகு தூரத்தில் இருந்ததால் நானும்  செல்வா அவர்களாலும் சரியாக படம் எடுக்க முடியவில்லை .செல்வா அவர்கள் வீடியோ பதிவை சரியாக எடுத்திருந்தார் .

broadbill :ஒரு பச்சை வண்ணத்தில் ,தொண்டையில் மஞ்சள் வண்ணத்துடன் ,தலைப்பகுதி கருப்புநிற ஹெல்மெட் அணிந்தது போல காணப்படும் .அதன் வால் பகுதி மட்டும் நீல நிறத்தில் இருக்கும் .இதனை காண்பதே ஒரு முக்கியமான பகுதியாக ஹேமந்த் தன்னுடைய birding டூரில் குறிப்பிட்டு இருந்தார் .1000mm லென்ஸ் இருந்தால் தெளிவான ஒரு அற்புதமான படம் கிடைத்து இருக்கும் .

இது ஒரு சிறிய பறவை .இதனை சவுத் இந்தியாவில் பார்ப்பது கடினம் .வட இந்திய பகுதியில் ஹிமாலயாவிலும் அதன் சுற்றிலும் காணப்படுகிறது .

சத்தால் -இன்னும் ஒருமுறை போக broadbillum ஒரு
காரணமாக இருக்கும் .செல்வா அவர்கள் இன்னும் long tailed Broadbill  பற்றி மட்டுமே குறிப்பிட்டு கொண்டு இருக்கிறார் 

Saturday, July 13, 2024

 தம்பி கார்த்திக், 

இந்த பதிவு மூலம், உனது கிரீன் சர்க்கிள் பற்றிய கருத்துக்களை தெரிந்து கொண்டேன். 

குறிப்பாக இந்த வண்ணச்சிறகுகள் தொடரில் உனது ஒவ்வொரு பதிவையும் நீ எழுதும் போது உண்மையில், நான், நமது இந்த பறவை காணல் முயற்சியில், ஒரு புதிய பரிமாணத்தைப் பார்க்கிறேன். 

அதாவது, நாம் பேசும் போது பகிர்வதை விட எழுதும் போது , பல பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. நீ எழுதும் கருத்துக்கள், அது தொடர்பான சில பல புதிய சிந்தனைகளைத் தூண்டிவிடுகின்றன. வடிவேலு ங்கைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது. ஒரு படத்தில் நாட்டாமை சொல்வார். 'என்ன நான் சொல்றது? நான் சரியாத்தான் சொல்றேனா' அப்படின்னு கேட்பார். அந்த வடிவேலு joke , நல்லாவே இருக்கும். joke ஒரு புறம் இருக்க, நம்ம செய்வது சரியா என்பதை மற்றவரின் கண்ணோட்டத்தில் பார்ப்பதில் ஒரு சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. சிலசமயம், இயல்பாக செய்யும் செயல்கள் நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். உள்ளதை உள்ளபடி சொல்லும் திறமை உன்னிடம் இருக்கிறது. அது எனக்கு ஒரு feedbackகாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. 

Hide  அனுபவத்தைப்பற்றி எழுதியிருந்தாய். அதாவது ஒரு கூடாரத்தினுள் அமர்ந்து பறவைகளுக்குத்தெரியாமல், பறவைகளை கண்காணித்து, அவற்றை படம் பிடிப்பது. இது ஒரு நல்ல முறை தான் என்றாலும், இதைப்பற்றி  கருத்து வேறுபாடு உண்டு. இது நாம் பெங்களூரில், புத்தனஹள்ளி பறவை காப்பகத்தில் பார்த்த ஒன்று தான். அனால், ஒரு சின்ன வித்தியாசம் என்னன்னா, இங்கே பரவைகளுக்கு உணவு வைப்பதில்லை. ஆனா, சத்தாலில், பறவைகளுக்கு, தானியங்கள் வைக்கிறார்கள், மற்றும் தண்ணீர்த்தொட்டியில், தனண்ணீர் நிரப்புகிறார்கள். அதுவும் குறிப்பாக, இந்த இடங்கள் ஆள் நடமாட்டமில்லாத, அடர்ந்த காட்டுப்பகுதிகளில், இந்த கூடாரங்கள் இருக்கும். நம்மிடம், சுமார் 2000 ரூபாய் வாங்கி விட்டார்கள். நல்ல சீசனில், இன்னும் அதிகம் வசூல் செய்வார்கள். என்ன செய்வது, இந்த உணவை நாடி வரும் பறவைகளை நாடித்தானே அவர்கள் வாழ்க்கை இருக்கிறது. எனது நண்பர் ஒருவர், இதில் ஒரு thrill இல்லை என்று கூறினார். 

ஆனால் ஒன்று மட்டும் உண்மை, பறவைகளை மிக அருகில் பார்க்க ஒரு சந்தர்ப்பம். அதோடு, நாம் பறவைகளை துன்புறுத்தவில்லையே! ஆகவே, எனக்கு இது அவ்வளவாகத் தப்பாகப் படவில்லை. என் கருத்து தவறாகக்கூட இருக்கலாம் இருந்தாலும், இதையே நம்பி நாம் பறவை காண செல்லக்கூடாது. ஸ்டூடியோ பகுதியில் நடைப்பயணம் செய்வது ஒரு த்ரில் தான். ஒரு கிமி போனால் கூட அது ஒரு அற்புதமான அனுபவம் தான். ஹைடில் பார்க்கும் பறவைகளை இங்கும் காணலாம். ஸ்டூடியோ என ஏன் இந்த இடத்தை அழைக்கிறார்கள் என நான் சொன்னது நினைவிருக்கும். உன்னையும் என்னையும் போன்ற புகைப்பட ஆர்வலர்கள், இங்கே இருக்கும் ஓடையின் அருகில் மணிக்கணக்கில் அமர்ந்து தங்களது திறமைகளை சோதிக்க ஒரு வாய்ப்பு, இதை விட  நல்லா கிடைக்காது. 

இந்த முறை ஓடையில் தண்ணீர் வரவு அதிகமில்லை. பறவை வழிகாட்டி ஹேமந்த் சொன்னது சரி தான், ஹேமந்த் நல்ல இளைஞர். அவருக்கு சம்பாதிக்க வாய்ப்பு என்றாலும், நம்மை வரவேண்டாம் என்று எச்சரித்தார். நம்மைப்போன்ற பறவை ஆர்வலர்கள், ஏமாற்றம் அடையக்கூட்டதென்ற நல்ல எண்ணம். இதை நாம் business ethics என்றும் சொல்லலாம் இல்லையா?

அது மட்டுமல்ல, ஹேமந்த் ஒரு சகல கலாவல்லுனர். சின்னதா ஒரு உணவகம் நடத்துகிறார். SUV காரும் அவர், வைத்துள்ளார். தங்க இடமும் ஏற்பாடு செய்து தருகிறார். பறவைகளைப்பற்றிய விவரமும், விரல்   நுணியில் வைத்திருந்தார். இவரை இரண்டு வருடங்களாக்த்தெரியும். என்ன ஆச்சரியம் என்றால், ' சார், நீங்க, போன வருஷம் ஜுன் 20 ஆம் தேதி வந்திருந்தீர்கள் என்று கூறினார். அசந்து போய் விட்டேன். என்ன நாமெல்லாம் MBA என்றும் கார்ப்பரேட் உலகில், நாம் நம்மை ஆளுமையில் சிறந்தவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  இது ஒரு வகைத்திறமை தான். 

8.30 மணி ஆகி விட்டது. ஹைடில் பறவை வருவது குறந்து விட்டது. அங்கு இருந்து, கிளம்பி ஸ்டூடியோ பகுதிக்கு போனோம். ஒடை அருகில் உட்கார்ந்து நமது அதிர்ஷ்டத்தை பார்க்க நினைத்தோம். பறவை காணல், எப்போதுமே அதிர்ஷடத்தைப்பொறுத்தது. நமக்கு தெரிந்தது தான். மணி 9 ஆச்சு, ஒரு red wattled lapwing, ஒரு magpie robin, ஒரு vedtiter flycatcher... அவ்வளவே தான்.  எனக்கு பசி எடுக்க ஆரம்பிசிருச்சு. உடனே ஹேமந்த், தனது டாபாவுக்கு போன் பண்ணி, சுட சுட ஆலு பராந்தாவும்,தயிரும் வரவைத்து விட்டார். அதற்கு காசு கூட வாங்கிக்கல்ல. கடைப்பையன் அருகில் இருந்து, கவனித்டுக்கொண்டான். அது நல்ல பிக்னிக் போல இருந்துச்சு இல்லையா?  

மேலே நாளைக்கு எழுதுகிறேன்

செல்வா

சத்தால் - Green circle -சந்திப்பு - ரெட் -பில்ட் -லியோத்ரிக்ஸ் உடன் ஒரு நிமிட பயணம் -பாகம் -2


எனக்கு அவ்வளவா ரயில் சாப்பாடு ஒத்துக்கல ரூமுக்குநேரபோய் தூங்கணும்னு நெனைச்சேன் .ஆனா செல்வா அவர்கள் சத்தால் green circle மீண்டும் புதுப்பிக்கலாம்ன்னு ஒரு சந்திப்பு ஏற்பாடு பண்ணியிருந்தார் .நான் போவது கொஞ்சம் சந்தேகம் இருந்தது .முதல் நாள் ஒரு பறவையும் கிடைக்காதது கொஞ்சம் யோசனையாக இருந்தது .ஆனால் செல்வா அவர்களுக்காக கிளம்பலாம்ன்னு முடிவு பண்ணி கிளம்பிட்டேன் .நாங்கள் Aftar அவர்களை சந்திக்க சென்றோம் .அவரது வீட்டில் எல்லா குழு உறுப்பினர்களுக்கும் சந்திக்க அழைத்திருந்தார் .

Tuesday, July 9, 2024

சத்தால் : சாட்-டல் - ஏழு ஏரிகள் - பாகம் -1

செல்வா அவர்களும் நானும் பெங்களூரின் பல ஏரிகளுக்கு சென்று இருக்கிறோம் .எப்பொழுது சென்றாலும் செல்வா அவர்கள் சொல்வது நைனிடால் ,சத்தால் பறவைகளும் அதன் வண்ணங்கள் பற்றியும் .நீங்க கண்டிப்பா ஒருதரம் பாக்கணும்னு சொல்லி சொல்லி எனக்கு அது ஒரு ட்ரீம் உலகமா உருவானதுன்னு சொன்னால்  அது மிகையாகாது .ஒரு முறை செல்வா அவர்கள் டெல்லி போகிருந்தப்ப என்ன சத்தால் செல்ல அழைத்திருந்தார் .எனக்கு அப்ப விடுமுறை கிடைக்காததால என்னால போக முடியல .அவரும் அதுனால  அங்க போகல .இந்த முறை இருவருக்கும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த பிளான் பண்ணினோம் .


சத்தால் : ஏழு ஏரிகளும் ,இமயமலையின் தாழ்வாரத்தில் அமைந்த மலையும் பல வண்ணபறவைகளின் உலகமாக உள்ளது .எங்களது பயணம் டெல்லியில் இருந்து 6 மணிநேரம் .டெல்லியில் இருந்து ஹல்த்வாணிக்கு (Haldwani )-காத்கோடம் (kathgodam )சென்ற பயணம் பற்றி எழுத இன்னொரு பாகம் தேவைப்படும் .இந்தியாவின் மிகப்பெரிய காடுகளின் ஒன்றான ஜிம் கார்பெட்டின்  (Jim corbett ) ஒட்டிய பகுதிகளில்  சென்றது குறிப்பிடத்தக்கது .

ஹேமந்த் : எங்களது birding guide .அவர் எங்களை அழைத்து செல்ல   குல்திப் என்பவரை  அனுப்பி வைத்திருந்தார் .காத்கோடத்தில் இருந்து சுமார் 33 கிமீ பயணம் .நாங்கள் சிறிது தாமதமாக சென்றதால் ரயில் நிலையத்தில் மிக அதிக கூட்டம் . சிறிது நேரத்தில் குல்திப் எங்களை அங்கிருந்து சத்தால் அழைத்து சென்றார் .அங்கிருந்து செல்லும் வழியில் உணவு அருந்தி விட்டு கிளம்பினோம் .

செல்லும் வழியெல்லாம் மலைகளும் ,மரங்களும் ஒருவித அற்புதமான உணர்வை தந்தது.

நான் கனவில் நினைத்ததைவிட அற்புதமாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

போகும் வழியில் செல்வா அவர்கள் அவரது  அத்தனை சத்தால்  பற்றிய  அனுபவங்களையும் சொல்லிக்கொண்டே வந்தது எனக்கு ஒரு நல்ல ஒரு அனுபவம்  .எனக்கு என்னோவோ வட இந்தியா முதல் முறை வருவது போன்ற உணர்வே இல்லை .எனக்கு செல்வா அவர்கள் கூட இருந்ததனால் அந்த மாதிரி தோன்றியதோ என்னோவோ .

நாங்கள் முதலில் சென்றது சத்தால் ஸ்டுடியோ .இது ஒரு அடர்ந்த காடு .ஸ்டூடியோ என்ற பெயர்   nature /bird போட்டோகிராபர்கள் இந்த இடத்திற்கு வந்து போட்டோ எடுக்க   வருவதால் அந்த பெயர் .

முதல் பகுதி : அங்கேயே பறவைகள் வரும் எனக்கூறி காத்திருக்க சொன்னார் ஹேமந்த் .எனக்கு ஹிந்தி பேசவராது .ஆனால் புரியும் .சுத்தமாக புரியாத இடங்களில் எனது பார்வை செல்வா அவர்களை நோக்கி போகும் .அவரும் சிரிக்காமல் எனக்கு விளக்குவார்.

மழை தொடங்கியது .இன்னும் ஒரு பறவை கூட பார்க்கலை .

ஒரு  கூடாரத்தின் அடியில் காத்திருந்தோம் .ஒரு  அரைமணிநேரம் கழித்து மழை நின்றது .ஏற்கனவே நேரம் ஆகிருந்ததால் ,நாங்கள் அங்கிருந்து கிளம்ப வேண்டியிருந்தது .

அந்த மலைப்பகுதியை பார்த்தாகிற்று .ஆனால் எந்தவொரு பறவையும் பார்க்கவில்லை .கிளம்ப வேண்டியிருந்தது .

வெளியில் வந்து ஒரு டீ குடிக்கலாம் என இருந்தபோது ..சார் ,எல்லோ த்ரோட்டேட் மார்டென்  (Yellow throated marten ) என ஹேமந்த் அழைத்தார் ...

நான் கேமராவை செட் பண்ணி என்ன பறவை இது என்று உற்று நோக்கையில்  ..அது பறவை இல்லை ,ஒரு விலங்கினம் .

என்ன ஒரு அழகு .

அன்றைக்கு அத்தனை தூரம் பயணம் செய்து காத்திருந்ததற்கு இயற்கை  அளித்த பரிசு Yellow throated marten  .(இதனை கரும்வெருகு என தமிழில் குறிப்பிட்டுள்ளார்கள்) 

தொடரும்



தம்பி கார்த்திக், 

சாத்தால், ஆம்,  சாத் என்றால் ஏழு, தால் என்றால் ஏரி என்று இந்தியில் பொருள்படும்.  உண்மையில் சொல்லவேண்டும் என்றால்,  உன்னை நான் கட்டாயப்படுத்தி இந்த இடத்துக்கு அழைக்கிறோமோ என்ற ஒரு மனச்சுமை எனக்கு இருந்து கொண்டே இருந்தது. உனது பாகம் 1 பார்த்த பின் தான், நீ, அந்த பறவைகளின் சொர்க்கபூமியை எவ்வளவு விரும்பியிருக்கிறாய் என்று அறிந்து கொண்டேன். ஒரு 7 அல்லது 8 முறை தில்லியில் இருந்த போது ஆண்டு தவறாமல் போவதுண்டு. ஆனால், இந்த முறை தான், 84 பறவைகளை பதிவு செய்துள்ளேன். பறவை வழிகாட்டி, ஹேமந்த், இப்பொழுது வரவேண்டாம் என்று எச்சரித்தும், நான் இங்கே போவதில் உறுதியாக இருந்தேன். என் சாத்தால் ஆர்வம் இன்று நேற்று வந்ததல்ல. நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. ஆனால் சரியான ஒரு துணை இது வரை அமையவில்லை என்பது தான் உண்மை. நீ வந்த பிறகு தான் அது நிறைவேறியது. எத்தனை காலம் இந்த ஆர்வத்தை தாங்கிப்பிடிக்க முடியும் என்று தெரிய வில்லை. 

சத்தாலில்,    நாம் நேரே ஸ்டுடியோ பகுதிக்கு போக நமக்கு பல தடைகள்.  நம்ம ரயில் பயணம் தாமதமானது எனது பொறுமையை சோதித்தது உண்மை. சத்தாலை அடைந்த போது, சுமார் 3.30 மணி இருக்கும். அதிலும் ஸ்டுடியோ ஸ்பாட்டை அடையும் போது, சரியான மழை. ஆக, ஆரம்பமே சரியில்லை. சரியான disappointment. எனக்கு பழகிப்போன இடம் என்றாலும், நான் உன்னைப்பற்றி கவலையாக இருந்தேன். இவ்வளவு தூரம், கூட்டி வந்தபின், சே, சே, நாளையாவது நல்லா இருக்குமா அப்பிடின்னு கவலை. 

அப்பறம் தங்கற இடம், எப்படி இருக்குமோ என்று கவலை. சாப்பாடு புடிக்குமோன்னு ஒரு தயக்கம். வழியில், உனக்கு சிறு உடல் பிரச்சனை சேர்ந்து கவலையை அதிகமாக்கி விட்டது. கிரீன் சர்க்கிள் மீட்டிங் வேற ஏற்பாடு செய்திடுந்தேன். செம தயக்கம். ஆனா, உன்னை நான் உண்மையிலேயே பாராட்டனும். ஏன்னா எதையுமே காட்டிக்காம, நீ மீட்டிங்க்கில் கலந்து கொண்டது மட்டுமல்ல, ஆர்வத்துடன், கூட்டத்தில், பங்கெடுத்தது, பாராட்டுக்குரியது. 

அன்னைக்கு ராத்திரி, நெரைய பேசினோம், கடந்த காலத்தை ஒரு அலசு அலசி விட்டோம். உன்னை நானும் , என்னை நீயும், ஒரு அலசு அலசி விட்டோம்னு தான் சொல்லனும். அதுவும், சரியான தூக்கம் இல்லை. அடுத்த நாள் விடிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து விட்டோம். நாங்க 4 நாளுக்கு கார் புக் செய்து இருந்ததால், பயணம் ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை. 

அன்னக்கு என்ன செய்தோம், நல்ல விடியலா, அடுத்த பாகத்தில் பார்ப்போம்

கூண்டுக்கிளி

கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது நான்  கொஞ்சம் புண்ணியம் செய்தவன் தான்!  ஆனால் அதோ அங்கே  நண்பா நீ, அந்தோ......